உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோவிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் துவக்கம்

திருப்பரங்குன்றம் கோவிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் துவக்கம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை அம்மனுக்கு எண்ணெய் காப்பு உற்ஸவம் துவங்கியது. கோயிலில் தெய்வானை மட்டும் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்தை மூன்று முறை வலம் சென்று திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்களால் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது, கருமுடி சாத்துப்படி செய்து மூலிகை எண்ணெய் தேய்த்தல், வெள்ளி சீப்பால் தலைவாருதல, தங்க ஊசிமூலம் பல்துலக்குதல், கண்ணாடி பார்த்தல் நிகழ்ச்சிகள் முடிந்து தீபாராதனை நடந்தது. டிச. 25வரை இந்நிகழ்ச்சி நடைபெறும். உற்ஸவ நாட்களில் பக்தர்களுக்கு மூலிகை எண்ணெய் பிரசாதம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !