உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் பகுதி கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

பெரியகுளம் பகுதி கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி யில் முனையடுவ நாயனார் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று திருவாதிரை நட்சத்திரத்தில் நடந்தது.அதிகாலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில்,விநாயகர், முருகன், காசி விஸ்வநாதர்,விசாலாட்சி, முனையடுவ நாயனார்,நடராஜர்,சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர்,சண்டிகேஸ்வரர், நாகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு திருமஞ்சனம்,மஞ்சள் பொடி,மா பொடி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர்,சந்தனம், பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை மற்றும் திருமுறைகள் பாடப்பட்டது. நடராஜர் சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் முக்கிய வீதிகளில் உலா வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

* பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா நடந்தது நடராஜர் சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
*பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் நடந்தது. நடராஜர் சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
*வடுகபட்டி செந்தில் முருகன் கோவிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் நடந்தது. ரிஷப வாகனத்தில் நடராஜர், சிவகாமி அம்மன் காட்சியளித்தனர்.
*பெரியகுளம் ஆதி வராக நதீஸ்வரர் கோவிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !