திருவண்ணாமலையில் ரமண மஹரிஷியின் 142வது ஜெயந்தி விழா
ADDED :1726 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், உள்ள ரமணாஸ்ரமத்தில், ரமண மஹரிஷியின் 142வது ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில், ரமணர் சன்னதிக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜையில் பங்கேற்று திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா ரமணர் பகவான் கீர்த்தனைகளை பாடல் பாடினார்.