பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2 கோடியே 36 லட்சம்
ADDED :1723 days ago
பழநி: பழநி மலைக்கோயில் உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 2 கோடியே 36 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது. பழநி மலைக்கோயிலுக்கு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரை பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனத்திற்கு வருகை புரிந்துள்ளனர் இந்நிலையில் பழநி மலைக்கோயிலில் நேற்று (டிச.24) உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 764 கிராம் தங்கமும், 12 ஆயிரத்து 857 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 36 லட்சத்து 14 ஆயிரத்து 65 மற்றும் 59 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன்,தேனி மாவட்ட ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன் உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் உண்டியல் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.