அகத்திய முனிவர் கோயிலில் உலக சித்தர்கள் தின விழா
ADDED :1484 days ago
திருநெல்வேலி: உலக சித்தர்கள் தினத்தை முன்னிட்டு அகத்திய முனிவர் கோயிலில் திருவிழா நடந்தது. அத்தாளநல்லுார் கிராமத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அகத்தியர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆயில்யம் நட்சத்திரதினத்தில் மகரிஷி
அகத்திய மாமுனிவரின் உதயதினம் மற்றும் உலக சித்தர்கள் தினத்தினை முன்னிட்டு அத்தாளநல்லுார் அகத்தியருக்கு திருவிழா நடந்தது. இதில் அகத்திய முனிவருக்கு காலை சிறப்பு ஹோமம், பூஜைகள் அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள், மேள தாளங்கள் முழங்க நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட அகத்தியர் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சிகொடுத்தார். ஏற்பாடுகளை திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.