உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஸ்தீக சமாஜத்தில் ரிக் வேத சம்பூர்ண ஜடா பாராயணம்

ஆஸ்தீக சமாஜத்தில் ரிக் வேத சம்பூர்ண ஜடா பாராயணம்

திருநெல்வேலி: தியாகராஜநகர் ஆஸ்தீக சமாஜத்தில் ரிக் வேத சம்பூர்ண ஜடாபாராயணம் துவங்கியது. பாளை தியாகராஜநகர் ஆஸ்தீக சமாஜத்தில் ரிக்வேத சம்பூர்ண ஜடா பாராயணம் கடந்த 18ம் தேதி துவங்கியது. வேதங்களை வேத பாராயண பண்டிதர்கள் ராமச்சந்திரன், மருதீஸ்வரன், ராமசுவாமி, திருச்சூர் சுப்பிரமணியன், பிரவீன்குமார், விக்னேஷ், அபிஷேக், ஸ்ரீகாந்த், ஸ்ரீராம், ராமபத்ரன் உட்பட 14 பேர் வேத பாராயணம் செய்து வருகின்றனர். தினமும் காலை 8 மணி முதல் 11.30 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் 6 மணி வரையிலும் வேத பாராயணம் நடந்து வருகிறது. இரவு 7 மணிக்கு ஆங்கரை ரங்கசாமி தீட்சதரின் நாராயணீய உபன்யாசம் நடந்துவருகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ குருபாதுகா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !