உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலுக்குள் யானைகள் விளையாட்டு சுவாமி சிலைகள் சேதம்

கோவிலுக்குள் யானைகள் விளையாட்டு சுவாமி சிலைகள் சேதம்

வால்பாறை: வால்பாறை அருகே, கோவில் சிலைகளை சேதப்படுத்திய யானைகளை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவித்தனர்.வால்பாறையில், சில எஸ்டேட்களில் பகல் நேரத்தில் யானைகள் தேயிலை காட்டில் முகாமிடுகின்றன. இதனால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர். நேற்று முன் தினம் நள்ளிரவு, சின்கோனா டான்டீ இரண்டாம் டிவிஷன் துர்க்கை அம்மன் கோவிலுக்குள் யானைகள் புகுந்தன. அங்குள்ள விநாயகர் சிலை, அம்மன் சிலைகளை யானைகள் சேதப்படுத்தின. அதன்பின், டான்டீ வாகனம் பழுது பார்க்கும் அறையின் கதவு, ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தின. யானைகளை விரட்ட வனத்துறையினர் யாரும் வராத நிலையில், தொழிலாளர்களும் சம்பவ இடத்துக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !