காரைக்குடி சிவன் கோயிலில் ஜீவராசிகளுக்கு படிக்கும் நிகழ்ச்சி
ADDED :1384 days ago
காரைக்குடி: காரைக்குடி நகர சிவன் கோயில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அம்பாள் சகிதம் சகல ஜீவராசிகளுக்கும் படியளக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சுவாமி அம்பாள், அம்மன், சண்டிகேஸ்வரர், விநாயகர், முருகன் தனித்தனி வாகனங்களில் கோயிலில் இருந்து புறப்பட்டு பெருமாள் கோயில், கீழே ஊரணி, மேலமடம் வழியாக கொப்புடையம்மன் கோயில் வந்தது. சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, வழி நெடுகிலும் பக்தர்களுக்கு சுவாமி படியளந்த அரிசி வழங்கப்பட்டது. பக்தர்கள் பட்டாடை அணிவித்தும், சிறப்பு அர்ச்சனை செய்தும் சுவாமி அம்பாளை வழிபட்டனர்.