சொர்ணாகர்ஷ்ண பைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :1409 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, தேவம்பாடி அமணீஸ்வரர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சொர்ணாகர்ஷண பைரவவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பழமையான தேவம்பாடி அமணீஸ்வரர் கோவிலில், சமீபத்தில் நடந்த கும்பாபிேஷகத்தின் போது, சொர்ணாகர்ஷண பைரவவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். பைரவவருக்கு உகந்த நாளாக, தேய்பிறை அஷ்டமி கருதப்படுகிறது. இந்நாளில், பைரவரை வணங்கினாலே துன்பங்கள் தீரும், நோய்களும் பயமும் அகலும் என்பது நம்பிக்கை. தேய்பிறை அஷ்டமியான நேற்று, தேவம்பாடி அமணீஸ்வரர் கோவில் அமைந்துள்ள சொர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள், அலங்கார வழிபாடு நடந்தது.