முதுகுளத்தூர் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
ADDED :1350 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் - பரமக்குடி சாலை மின்வாரிய அலுவலகம் எதிரில் உள்ள ஐயப்பன் கோயிலில் முதுவை சாஸ்தா பக்தர்கள் குழு சார்பில் 51 ஆம் ஆண்டு மண்டலபூஜை விழா நடந்தது.காலை 4 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கி யாகசால பூஜைகள் நடந்தது. பின்பு காலை 9 மணிக்கு 208 திருவிளக்கு பூஜை நடந்தது.பின்பு ஐயப்பனுக்கு நெய்,பால் உட்பட 15 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்கள் படி பூஜை மற்றும் பஜனை பாடினர்.முதுவை சாஸ்தா பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் நடந்தது. விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.