உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானக்கஞ்சாற நாயனார் குருபூஜை

மானக்கஞ்சாற நாயனார் குருபூஜை

திருப்பூர் : ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோலிலில் நேற்று, மானக்கஞ்சாற நாயனார் குருபூஜை விழா நடந்தது.அர்த்தசாம பூஜை அடியார்கள் திருக்கூட்டத்தினர் சார்பில், நேற்று குருபூஜை விழா நடந்தது. அடியார் கேட்டதற்காக, திருமணத்துக்கு தயாராகியிருந்த மகளின் கூந்தலை அறுத்து கொடுத்து, சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டவர், மாக்கஞ்சாற நாயனார்.நாயனார் சிவனுடன் கயிலை சென்ற நாளான நேற்று, குருபூஜை நடந்தது. சிவச்சாரியர்கள், அபிஷேக, அலங்கார பூஜைகளை நடத்தினர். சிவனடியார்கள், திருவாசகம், திருத்தொண்டர் புராண பாடல்களை பாராயணம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !