உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி கோவிலில் இருந்து அயோத்திக்கு குடை யாத்திரை

புதுச்சேரி கோவிலில் இருந்து அயோத்திக்கு குடை யாத்திரை

புதுச்சேரி: புதுச்சேரி அகில பாரத இந்து மகா சபா சார்பில், முத்தியால்பேட்டை தென்கலை சீனுவாசப் பெருமாள் கோவிலில் இருந்து அயோத்திக்கு குடை யாத்திரை புறப்பட்டது. இந்நிகழ்ச்சி நேற்று மாலை 3.௦௦ மணிக்கு பெருமாள் கோவிலில் துவங்கி, கொசப்பாளையம் நவீனா கார்டன், நவநீத கிருஷ்ணன் கோவிலை 6.30 மணிக்கு வந்தடைந்தது.இரவு 7:30 மணிக்கு குடையாத்திரையை முன்னாள் எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன் துவக்கி வைத்தார். யாத்திரை குழுவிடம், அ.தி.மு.க., மேற்கு மாநில செயலர் ஓம்சக்தி சேகர் குடையை வழங்கி அனுப்பி வைத்தார்.ஏற்பாடுகளை அகில பாரத இந்து மகா சபா விழாக்குழு தலைவர் தண்டபாணி செய்திருந்தார். நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், பாலாஜி, ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !