உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துமலை அனுமந்தபுரி கோயிலில் ஜன.2ல் அனுமன் ஜெயந்தி விழா

ஊத்துமலை அனுமந்தபுரி கோயிலில் ஜன.2ல் அனுமன் ஜெயந்தி விழா

தேவர்குளம்: வன்னிக்கோனேந்தல் அருகே ஊத்துமலை, மலைஅடிவாரம், கீழ்ப்பகுதி, ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி ஜனவரி 2ம் தேதி நடக்கிறது.


தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா, வன்னிக்கோனேந்தல் அருகேஊத்துமலை மலை அடிவாரம் கீழ்ப்பகுதி, சீவலபுரம், கரடி உடைப்பு பஞ்., அனுமந்தபுரியில் ராமபக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா ஜனவரி 2ம் தேதி நடக்கிறது. அன்று காலை 7.15 மணிக்கு மேல் நவக்கிரஹ, சுதர்சன, ஆஞ்சநேய மூலமந்திர ஜெபஹோமங்கள், ஆஞ்சநேய சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு அபிசேகம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை வன்னிக்கோனேந்தல், அனுமந்தபுரி ராமபக்த ஆஞ்சநேயர் பக்தசபாவினர், ஊத்துமலை மலைஅடிவார மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !