உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் கொடை விழா

முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் கொடை விழா

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி, முப்பந்தல் இசக்கி அம்மன் கோயிலில் கொடை விழா நடந்தது.

ஆரல்வாய்மொழி, முப்பந்தல் இசக்கி அம்மன் கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு, காலையில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அமுது படைத்து தீபாராதனை நடைபெற்றது. பின் மஞ்சள் நீராடுதல், வில்லிசை, நையாண்டி மேளம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் சண்முக பெருமாள் தலைமையில்  ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !