கல்பதரு ராமகிருஷ்ணர் தினம்: ஜன., 1ல் கொண்டாட்டம்
ADDED :1391 days ago
தஞ்சாவூர் : பகவான் ராமகிருஷ்ணர் 1886 ஜனவரி 1ம் தேதியன்று, பக்தர்கள் வேண்டியதை அருள்வதற்காகவே கல்பதருவாக மாறி அருளினார். அந்த தினத்தை கொண்டாடும் வகையில், வருகிற ஜனவரி 1ம் தேதியன்று, தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் சார்பில், சுவாமி விமூர்த்தானந்தரின் தலைமையில், கீழ்கண்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
காலை
05.00 மணி மங்கள ஆரத்தி
07.30 மணி ராமகிருஷ்ணருக்கு நித்ய பூ;ஜை
10.00 மணி ஆரோக்கியத்திற்கான மருத்துவ ஆலோசனைக் கூட்டம்
11.30 தீபாராதனை
பிற்பகல்
03.00 கல்பதருவாக ராமகிருஷ்ணர் பக்தர்களுக்கு அருளிய நேரத்தில் தியானம்
03.45 விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம்
04.30 இணையதளம் மூலம் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி
06.15 தீபாராதனை
06.45 "கல்பதரு ராமகிருஷ்ணர்"-உரை சுவாமி விமூர்த்தானந்தர்.