முருகனை நினை மனமே
ADDED :1462 days ago
‘அவனவன் தலையெழுத்துப்படி தான் வாழ்வு நடக்கும்’ என்பர். இதை படைப்புக்கடவுளான பிரம்மாவே தன் கையால் நம் தலையில் எழுதுவதாக ஐதீகம். அதனால் இதற்கு ‘பிரம்ம லிபி’ என்று பெயர். இதன் அடிப்படையில் தான், நவக்கிரகங்கள் மனித வாழ்வில் நன்மையோ, தீமையோ ஏற்படுத்துகின்றன. பக்தியால் பிரம்மலிபியை மாற்ற முடியும் என்கிறார் அருணகிரிநாதர். திருப்புகழில் அவர், ‘நின் கால்பட்டு அழிந்தது அயன்(பிரம்மா) கையெழுத்தே’ என்று குறிப்பிடுகிறார். முருகனை சரணடைந்தால் விதியை கூட வெல்லும் வலிமை உண்டாகும்.