குறுக்குத்துறை முருகன் கோயிலில் மீண்டும் தரிசனத்திற்கு அனுமதி
ADDED :1390 days ago
திருநெல்வேலி: குறுக்குத்துறை முருகன் கோயிலில் மீண்டும் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் குறுக்குத்துறை முருகன் கோயில் உள்ளது. தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கோயிலில் இருந்த சுவாமி உற்சவர் சிலைகள் மேலக்கோயிலுக்கு மாற்றப்பட்டன. அங்கு வழக்கமான பூஜைகள் நடந்தன. மழை நின்ற பின் கோயில் மண்டபத்தில் சகதியை அகற்றி சீரமைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடந்தது. கோயிலுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. மார்கழி, விசாக நட்சத்திர நாளான நேற்று கோயிலில் மீண்டும் சுவாமி தரிசனம் துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் வரிசையில் நின்று சாமி கும்பிட்டனர்.