பாதயாத்திரை பக்தர்களுக்கு மேம்பாலத்தில் தனிப்பாதை
ADDED :1390 days ago
ஒட்டன்சத்திரம் : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்று வருகின்றனர். குறிப்பாக திண்டுக்கல் வழித்தடத்தில் அதிகமான பக்தர்கள் செல்கின்றனர். பக்தர்கள் விபத்தின்றி பயணம் செய்ய வசதியாக ரோட்டோரம் தனிப் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ஒட்டன்சத்திரம் - செம்மடைப்பட்டி இடையே ரோடு பணிகள் நடப்பதால் தனிப்பாதையில் இருந்த பேவர் பிளாக் கற்களை பொதுமக்கள் எடுத்துச் சென்றனர். இந்நிலையில் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரயில்வே மேம்பாலத்தில் வாகனங்களால் பக்தர்கள் பாதிக்காமல் இருக்க டி.எஸ்.பி., சோமசுந்தரம் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையில் போலீஸார் வேகத்தடுப்பான்களை வைத்து தனிப்பாதை ஒதுக்கி உள்ளனர். இதனால் இரவிலும் பக்தர்கள் பயமின்றி பயணிக்கின்றனர்.