மண்டலாபிஷேக பூர்த்தி விழா
ADDED :1390 days ago
திருநெல்வேலி: நெல்லை சிந்துபூந்துறை மற்றும் சிவசைலத்தில் குரு மூர்த்தமாக எழுந்தருளியிருக்கும் 6வது மற்றும் 16வது குரு மகா சந்நிதானங்களின் குரு மூர்த்த ஆலயங்களின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 15ம் தேதி நடந்தது. இதனையடுத்து நேற்று சிவசலைம் மற்றும் சிந்துபூந்துறையில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.
திருக்கயிலாய பரம்பரை தருமையாதீனம் ௨௭வது குருமா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலை வகித்தார். காலையில் விசேஷ பூஜைகள், தீபராதனை நிகழ்ச்சிகள், மதியம் அன்னதானம், ஆசி வழங்கல் நிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் தென் மண்டல கட்டளை விசாரணை ஞான சம்பந்த தம்பிரான் உட்பட பலர்கலந்து கொண்டனர்.