உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாம்பவர் வடகரை ஐயப்பனுக்கு சரணகோஷம் முழங்க வரவேற்பு

சாம்பவர் வடகரை ஐயப்பனுக்கு சரணகோஷம் முழங்க வரவேற்பு

அம்பாசமுத்திரம்: மகர ஜோதியை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை சுவாமி ஐயப்பன் கோயில் உற்சவ மூர்த்தி ஐயப்பனின், திருத்தலங்கள் விஜயம் நேற்று காரையார் சொரிமுத்தையனார் கோயிலில் இருந்து துவங்கியது. அம்பாசமுத்திரம் அம்மையப்பர் கோயிலை வந்தடைந்த ஐயப்பனுக்கு சரண கோஷங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டி மலர் தூவி வழிபட்டனர். இதில், அம்பாசமுத்திரம் ஐயப்பா சேவா சங்க தலைவர் வாசுதேவராஜா, நகர வியாபாரிகள் சங்க தலைவர் பண்ணை சந்திரசேகரன், காசிநாதர் ராஜகோபுர கமிட்டி பொருளாளர் சிவராமன், மணி குருசாமி, சண்முகம், சூர்யா குமார், ரமானந்தன், சந்தான கிருஷ்ணன், வெள்ளப்பாண்டி, எழில் நகர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு கோயில்களுக்கு விஜயம் செய்யும் சுவாமி ஐயப்பன் ஜன. 14ம் தேதி சாம்பவர் வடகரை கோயிலை சென்றடைகிறார். மாலை 6.44க்கு மகர ஜோதி பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !