திருக்கோஷ்டியூரில் புத்தாண்டு, ஆழ்வார் திருநட்சத்திர வைபவம்
ADDED :1407 days ago
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் அதிகமாக சாமி தரிசனம் செய்தனர். தொண்டரடிப் பொடியாழ்வர் திருநட்சத்திர வைபவமும் நடந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் வருகை தொடர்ந்து காணப்பட்டது. சிறப்பு வழிபாடு, உற்ஸவர் அலங்காரம் இல்லாததால் மூலவர் சன்னதியில் சயன கோலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்தனர்.
மார்கழி கேட்டை தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருநட்சத்திர வைபவத்தை முன்னிட்டு அவருக்கு அபிஷேகம் நடந்து மூலவர் சன்னதியில் எழுந்தருளினார். தொடர்ந்து தொண்டரடிப்பொடி ஆழ்வார், ராமானுஜர், திருக்கோட்டியூர் நம்பிகள், மணவாள முனிகள் மற்றும் ஆழ்வார்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளல் நடந்தது.