திருப்பரங்குன்றத்தில் தீர்த்த உற்ஸவம்
ADDED :1710 days ago
திருப்பரங்குன்றம்: அமாவாசையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து பல்லக்கில் அஸ்தரதேவர் சரவண பொய்கை கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்த்து பூஜைகள் நடந்தது. பின்பு சிவாச்சாரியார்கள் அஸ்தர தேவரை சரவணபொய்கை தண்ணீரில் கொண்டு சென்று தீர்த்த உற்ஸவம் நடந்தது. மலைக்கு பின்புறம் எழுந்தருளியுள்ள பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து சிறப்பு அலங்காரமானது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.