காரமடை அரங்கநாதர் கோயிலில் பகல் பத்து உற்சவம்: 2ம் நாள்
ADDED :1382 days ago
காரமடை : கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இங்கு வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாளில் காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ரங்க மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் ரங்கநாதர் முன்பு ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் திவ்யப் பிரபந்த பாசுரங்கள், வேதங்கள் முதலியவைகளை வாசித்தனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.