கோயில் வளாகத்தில் சாய்ந்த மரங்களால் பக்தர்களுக்கு இடையூறு
ADDED :1376 days ago
ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயில் வளாகத்தில் சாய்ந்து காய்ந்த மா மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள இக்கோயிலுக்கு சித்திரையில் திருவிழா நடைபெறும். அமாவாசை, பௌர்ணமி, மாதாந்திர கார்த்திகை நாட்களில் தேனி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வர். மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் சுனைநீர் கோயிலின் சிறப்பு. கோயில் வளாகத்தில் கருப்ப சுவாமி கோயில் அருகே ஓங்கி உயர்ந்த மாமரங்கள் கடந்த சில மாதத்திற்கு முன்பு சாய்ந்தது. வனபகுதிக்கான இடத்தில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்த வனத்துறை, ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை இல்லை. கோயிலுக்கு செல்லும் பாதையை மறித்து சாய்ந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்த பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.