எந்த ஊரு என்ன பேரு
ADDED :1388 days ago
அனுமனுக்கு நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயர் வழங்கப்படுகின்றது. தமிழகத்தில் ‘அனுமன், அனுமார்’ என்கிறோம். கன்னட மக்கள் ‘ஐயா’ என இணைத்து ‘ஹனுமந்தையா’ என்கின்றனர். தெலுங்கில் ‛அஞ்சனை மைந்தன்’ என்னும் பொருளில் ‘ஆஞ்சநேயலு’ என்கின்றனர். மகாராஷ்டிராவில் வாயுதேவனின் மகன் என்பதால் ‘மாருதி’ என அழைக்கின்றனர். ‛மாருதம்’ என்பதற்கு ‘காற்று’ என்பது பொருள். வட மாநிலங்களில் ‘மகாவீரர்’ எனப்படுகிறார். வீரதீரம் நிறைந்த இவரை மகாவீரர் என்பது பொருத்தம் தானே!