பாதியில் பஸ் ஏறிய பாதயாத்திரை பக்தர்கள்: பழநி கோயில் திணறியது
ADDED :1421 days ago
பழநி, தைப்பூசத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். வெள்ளி, சனி, ஞாயிறு, நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் அனுமதி இல்லை தமிழக அரசு திடீரென அறிவித்தது. இதனால் அறிவிப்பால் பக்தர்கள் பாதயாத்திரையை பாதியில் நிறுத்தி பஸ்ஸில் ஏறி பழநி வந்தடைந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்டத்தால் பழநி கோயில் நிர்வாகத்தினர் திணறினர்.