உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பணகுடி ராமலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

பணகுடி ராமலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

பணகுடி: பணகுடி ராமலிங்கசுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் மற்றும் நம்பி சிங்கபெருமாள் கோயிலில் நேற்று தைப்பூசதிருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தென் மாவட்டங்களில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் ஒன்றான பணகுடி ராமலிங்கசுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் மற்றும் நம்பி சிங்கபெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசதிருவிழா 10 நாட்கள் நடப்பது வழக்கம். தற்போது கொரோனா பரவி வரும் அசாதாரண சூழ் நிலையைகருதி கோயில் பணியாளர்களுடன் வேத விற்பன்னர்கள் நேற்று கோயில் கொடி மரத்தில் கொடியேற்றினர். திருவிழா நாட்களில் கோயில் வளாகத்தில் காலை, மாலையில் சிறப்பு அலங்கார பூஜையுடன் தீபாராதனை நிகழ்ச்சிகள் அரசு விதிகளை பின்பற்றி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !