உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ஆத்தூர்: ஆத்தூர் அருகே மகாசக்தி மாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சி வீட்டுவசதி நகர் பகுதியில், பிரசித்தி பெற்ற மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் இருந்த, செல்வகணபதி மற்றும் மாரியம்மன் ஸ்வாமிகளின் ராஜகோபுரம் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பணி முடிந்து, அதற்கான கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, பிம்ப சுத்தி, நாடி சந்தானம், ஸ்பர்ஸாஹுதி, புனித நீர் தீர்த்த கலச பூஜைகள், திரவ்வியாகுதி, யாத்ர தரிசனம், பூர்ணாகுதி உள்ளிட்ட மகா தீபாராதனை பூஜைகள் நடந்தது. காலை 10 மணியளவில், செல்வகணபதி மற்றும் மகாசக்தி மாரியம்மன் ஸ்வாமிக்கு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகர், மாரியம்மன் ஸ்வாமிக்கு தீபாராதனை பூஜைகள் நடந்து.கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !