உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

மதுரை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சொர்க்கவாசல் வழியாக சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில்  பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பூர் திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு, பரமபதவாசல் வழியாக வந்து நம்மாவாழ்வருக்கும், பக்தர்களுக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமயதராய் நம்பெருமாள் காட்சியளித்தார். கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !