உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டை பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி பூஜை

தேவகோட்டை பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி பூஜை

தேவகோட்டை: தேவகோட்டையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோதண்டராமர் ஸ்வாமி கோயிலில் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து ஸ்ரீ ராமர் சீதை லட்சுமணன் சமேதராக பரமபத வாசல் வழியாக எழுந்தருளினார். சிறப்பு தீபாராதனைகளை தொடர்ந்து சிறப்பு வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ரங்கநாதர் பெருமாள் கோயிலில் ரங்கநாதர் ஸ்ரீ தேவி பூதேவியுடன் பரமபத வாசல் வழியே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கிருஷ்ணராஜபுரம் கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து கிருஷ்ணர் பரமபத வாசல் வழியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுவாமிகள் அதிகாலை 4 :00 மணி அளவில் எழுந்தருளிய போது குளிரிலும் ஏராளமான பெண்களும் ஆண்களும் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !