ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகளை கோவில் பட்டர்கள் செய்தனர். பின்னர் சொர்க்கவாசல் மண்டபத்தில் ஆழ்வார்கள் எதிர்கொண்டு வரவேற்க, காலை 7:35 மணிக்கு சொர்க்க வாசல் கதவுகள் திறக்கப்பட்டது. முதலில் பெரிய பெருமாளும், அதனை தொடர்ந்து ஆண்டாள், ரங்கமன்னார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளும்போது பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோசத்துடன் தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் யானை ஜெயமால்யாதா முன் செல்ல, மாடவீதி வழியாக வடபத்ர சயனர் சன்னதி இராப்பத்து மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஆழ்வார்கள் எழுந்ததருள
அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் சடகோப ராமானுஜ ஜீயர், தக்கார் ரவிச்சந்திரன், அறநிலையத்துறை உட்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.