ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி எண்ணை காப்பு உற்சவம் நிறைவு
ADDED :1372 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம், மணவாள மாமுனிகள் மங்களாசாசனத்துடன் நேற்று நிறைவு பெற்றது.
கடந்த ஜனவரி 7 முதல் துவங்கி எட்டு நாட்கள் எண்ணை காப்பு உற்சவம் நடந்தது. வழக்கமாக திருமுக்குளம் எண்ணெய்க்காப்பு மண்டபத்தில் நடக்கும் இந்த உற்சவம் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோயில் வளாகத்தில் நடந்தது. நிறைவு நாளான நேற்று மாலை மணவாளமாமுனி சன்னதி வாசலில் ஆண்டாள் எழுந்தருள மங்களாசாசனம் நடந்தது. இதனையடுத்து நேற்றுடன் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் நிறைவு பெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் துவங்கிய இராப்பத்து உற்சவம் ஜனவரி 23ஆம் தேதி முடிய கோயில் வளாகத்திற்குள் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோவில் பட்டர்கள் செய்துள்ளனர்.