திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் ராப்பத்து உத்ஸவம் துவக்கம்
ADDED :1405 days ago
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று ராப்பத்து உத்ஸவம் துவங்கியது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பகல்பத்து உத்ஸவம் நிறைவடைந்து நேற்று முன் தினம் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று ராப்பத்து உத்ஸவம் துவங்கியது. தை முதல் நாள் என்பதால் பெருமாள் தாயாருடன் எழுந்தருளினார். மாலை 6:00 மணிக்கு பரமபத வாசலில் பெருமாள் தாயாருடன் எழுந்தருளி கடந்து சென்றார். தொடர்ந்து தினசரி மாலை பரமபத வாசலில் பெருமாள் எழுந்தருளல் நடைபெறும். ஜன.22 ல் ராப்பத்து உத்ஸவம் நிறைவடையும்.