பக்தர்கள் இன்றி ராமேஸ்வரம் கோயில் வெறிச்
ADDED :1459 days ago
ராமேஸ்வரம்: பொங்கல் திருநாளில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க ராமேஸ்வரம் கோயில் மூடியதால், ரதவீதி வெறிச்சோடி கிடந்தது. கொரோனா பரவல் தவிர்க்க ஜன., 14 முதல் 18 வரை கோயிலில் பக்தர்கள் தரிசிக்க தடை விதித்தது. அதன்படி தை திருநாளாம் பொங்கல் விழாவான நேற்று ராமேஸ்வரம் திருக்கோயில் மூடப்பட்டது. இதனால் வெளியூர், உள்ளூர் பக்தர்கள் வருகை இன்றி கோயில் அக்னி தீர்த்த கடற்கரை, ரத வீதியில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தது.