உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூசம் : ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் உலா

தைப்பூசம் : ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் உலா

ராமேஸ்வரம்: தைப்பூசம் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் உலா வந்தனர். ராமேஸ்வரம் திருக்கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா நடந்தது. இதில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வந்தனர். பின் கோயில் வளாகத்தில் உள்ள சிவ தீர்த்தத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்தது. இவ்விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், கோயில் இணை ஆணையர் பழனிக்குமார், மேலாளர் சீனிவாசன், பேஸ்கார்கள் கமலநாதன், அண்ணாதுரை, முனியசாமி, ஊழியர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !