வடபழநி ஆண்டவர் கும்பாபிஷேக யாகசாலை பூஜைக்காக தீர்த்த குடம் வலம்
ADDED :1407 days ago
சென்னை : சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையில் வைப்பதற்கான தீர்த்த நீர் குடங்களுடன் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் தலைமையில் யாகசாலைக்கு தலைமை தாங்கும் பிச்சை குருக்கள், மற்றும் அர்ச்சகர்கள் கோவிலை வலம் வந்தனர். கும்பாபிஷேகத்திற்காக பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.