42 அடி உயர வெட்காளியம்மனுக்கு 108 லிட்டர் பாலபிஷேகம்!
ADDED :4869 days ago
தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்டம் எட்டயபுரம் அடுத்த சிந்தலக்கரையில் காளிபராசக்தி தவசித்தர் பீடமுள்ளது. இங்கு, நேற்று 28வது ஆண்டு ஆனிமாத இருமுடிவிழா, வேள்வி பூஜை நடந்தது. காலை 6 மணிக்கு துவங்கிய வேள்வியில் உணவுப்பொருட்கள், தானியங்கள், தங்கத்தாலி, பட்டுப்புடவை உள்ளிட்டவை போடப்பட்டன. 10 மணிக்கு, நாட்டின் நலனிற்காக 42 அடி உயர வெட்காளியம்மனுக்கு, 108 லிட்டர் பாலபிஷேகம் நடந்தது. இதை, கோயில் நிறுவனர் ராமமூர்த்தி சுவாமிகள் செய்தார். தொடர்ந்து மும்மத பிரார்த்தனை நடந்தது. மாலை 5 மணிக்கு ராமமூர்த்தி சுவாமிகள், வெண்கல தீச்சட்டி எடுத்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இரண்டாவது நாளான இன்று, சுவாமி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.