ராமேஸ்வரம் கோயில் தேர்களுக்கு இரும்பு சக்கரங்கள் இணைப்பு!
ADDED :4870 days ago
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்பாள், சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து தேர்களுக்கான இரும்பு சக்கரங்களை திருச்சி பெல் நிறுவனம் தயாரித்து வழங்கியது. கடந்த வாரம் ராமேஸ்வரம் வந்த இவற்றை, அடிச்சட்டத்துடன் இணைக்கும் பணி நேற்று துவங்கியது. கோயில் இன்ஜினியர் மயில்வாகனன் கூறுகையில் இம்மாதம் 21ம் தேதி ஆடி தேரோட்டத்திற்கு பின், மரச்சக்கரங்கள் அகற்றப்பட்டு அடிச்சட்டத்துடன் கூடிய புதிய சக்கரங்கள், ஐந்து தேர்களில் பொருத்தப்படும் என்றார்.