குமரக்கடவுள் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1367 days ago
கமுதி: கமுதி அருகே மேலக்கொடுமலூர் கிராமத்தில் குமரக்கடவுள் முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் சிறப்புபூஜை நடந்தது. இந்தஆண்டு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.இந்நிலையில் நவநீத சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலை பூஜையுடன் துவங்கி தைப்பூச திருவிழா பூஜிக்கப்பட்ட 108 சங்காபிஷேகம் மற்றும் கும்ப அபிஷேகம் நடந்தது.பின்பு முருகனுக்கு பால்,தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு உட்பட 33 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்புபூஜை நடந்தது.பின்பு முருகனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.