உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலகுமலை கோவில் கும்பாபிஷேகம் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

அலகுமலை கோவில் கும்பாபிஷேகம் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பொங்கலூர்: பொங்கலூர் அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் வரும், 23 ஞாயிற்றுக்கிழமை காலை,9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் நடப்பதால் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண ஆவலோடு காத்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, பக்தர்கள் இன்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து விழா குழுவினர் கூறுகையில், கும்பாபிஷேகம் செய்வதற்கான பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நடத்தாவிட்டால் வைகாசி வரை தள்ளிப்போகும். எனவே, வேறு வழியின்றி தை மாதத்திலேயே கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சிவாச்சாரியர்கள் மட்டும் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை நடத்த உள்ளனர். பக்தர்கள் அவரவர் வீட்டிலிருந்தே முத்துக்குமார பாலதண்டாயுதபாணியை பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு வேண்டுகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !