சென்ன கேசவ பெருமாள் கோயிலில் மகா ஸம்ப்ரோ ஷணம்
ADDED :1451 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே இராமானுஜ புரத்தில் சென்னகேசவ பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் விழா நடந்தது. பூமி தேவி, ஸ்ரீதேவி உடன் சென்னகேசவ பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் பிரார்த்தனை ஆசார்ய வரணம், அஷ்டதிக் பந்தனம் மற்றும் அங்குரார்ப்பணம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், பூர்ணாகுதி, அனைத்து பரிவார சன்னிதி விமானங்கள் திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை கோபூஜை, துவார பூஜை, வேதபாராயணம் ஹோமம் நடந்தது. 10:15 மணிக்கு மகா சம்ப்ரோக்ஷணம் உபய சாற்றுமுறை நடந்தது. மாலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.