உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வட பழநி ஆண்டவரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்: மண்டலாபிஷேக பூஜை துவங்கியது

வட பழநி ஆண்டவரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்: மண்டலாபிஷேக பூஜை துவங்கியது

சென்னை: வட பழநி ஆண்டவரை தரிசிக்க இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

சென்னை வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. பக்தர்கள் வசதிக்காக, கும்பாபிஷேக நிகழ்வு நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள், ஆன்மிக அன்பர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே, வைபவத்தை கண்டு பரவசம் அடைந்தனர். ஊரடங்கு காரணமாக நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆன்லைன் மூலம் மட்டுமே பக்தர்கள் தரிசித்தனர். இன்று முதல் கோயிலுக்குள் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சென்னை மற்றும் சுற்றுப்பகுதி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகபெருமானை வணங்கி சென்றனர். பக்தர்கள் தரிசிக்க கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !