பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோயிலில் சனி மகா பிரதோஷ பூஜை
ADDED :1454 days ago
சித்தூர்: ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள நாகலாபுரத்தில் உள்ள சுருட்டுப்பள்ளி சர்வமங்கள சமேத பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோயிலில் இன்று சனி மகா பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.மாலை 5:30 முதல் 6:45 மணி வரை நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்ததோடு மகா தீபாராதனையை சமர்ப்பித்தனர் . மேலும் பிரதோஷத்தை யொட்டி நந்தீஸ்வரருக்கு இளநீர், பால், தயிர் , சந்தனம், விபூதி போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்ததோடு சிறப்பு அலங்காரம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர் .கோயிலில் கொரோனா தொற்று விதிமுறைகளைக் கடைப்பிடித்து ஏராளமான பக்தர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள், அறங்காவலர் குழு தலைவர் முனி சேகர் ரெட்டி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.