திருச்செந்துார் கோயில் கடற்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம்
ADDED :1426 days ago
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில், மாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டனர்.
இந்துக்கள் தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றாங்கரை, கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து, தங்கள் முன்னோர்களை வழிப்பட்டு விரதம் கடைபிடித்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. நேற்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு, ஏராளமானோர் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று காலையில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.