உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லவர் கால கொற்றவை, விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு

பல்லவர் கால கொற்றவை, விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு

விழுப்புரம்: திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் விஜயன், குணசேகரன் ஆகியோர் விழுக்கம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள வயல் வெளியில், சிற்பம் கண்டுபிடித்தனர்.இது குறித்து ராஜ் பன்னீர்செல்வம் கூறியதாவது:6 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட பலவை கல்லில் 8 கரங்களுடன் புடைப்பு சிற்பமான கொற்றவை சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அழகான கரண்ட மகுடம் தலையை அலங்கரிக்க, நீள் வட்டமான முகத்தில் சிரிப்புடன் தடித்த உதடுகளும், இரு கசவிகளும் கழுத்து வரை நீள குண்டலங்கள் ஏதும் இல்லாமல் அழகுடன் காணப்படுகிறது.இச்சிற்பத்தில் காணப்படும் ஆயுதங்கள், ஆடை மற்றும் அணிகலன்கள் வைத்து பார்த்தால், இதன் காலம் கி.பி., 7 ம் நூற்றாண்டாக இருக்கக்கூடும்.மேலும், இதே பகுதியில் 8 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் சதுர் புஜங்களுடன் சங்கு சக்கரம் ஏந்திய விஷ்ணு சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !