சேரன்மகாதேவியில் சிறப்பு பூஜை
ADDED :1385 days ago
சேரன்மகாதேவி: சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றுப்பாலம் கரையோரம் அமைந்துள்ள வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தோணித்துறை இசக்கியம்மன் கோயிலில்
கொரோனா நோய்த்தொற்றில் இருந்து அனைத்து மக்களும் நலம் பெற வேண்டியும் அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம், பால்அபிஷேகம், பஞ்சாமிர்தஅபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வன்னியர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.