உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்: பக்தர்கள் பங்கேற்பு

மாகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்: பக்தர்கள் பங்கேற்பு

கோத்தகிரி: கோத்தகிரி ஒன்னதலை கிராமத்தில் மாகாளியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழா, கடந்த, இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக நடக்கவில்லை. தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நடப்பாண்டு திருவிழா மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதல், அம்மனுக்கு அலங்கார அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, அம்மன் கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், பலர் நேர்த்திக்கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், ஆடல் பாடல் மற்றும் ஆன்மீக சொற்பொழிவு இடம்பெற்றது. இதில், ஒன்னதலை சுற்றுவட்டார கிராம மக்கள் திரளானோர் பங்கேற்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, ஒன்னதலை கிராம மக்கள், இளைஞர் மற்றும் மகளிர் நற்பணி மன்றக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !