திருப்பரங்குன்றம் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு
ADDED :1528 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா ஆறாம் நாள் விழாவில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகினர். கோயிலுக்குள் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, சத்தியகிரீஸ்வரர் பிரியாவிடை, கோவர்த்தனாம்பிகை அம்பாள், சீவிலிநாயகர், திருஞானசம்பந்தர் எழுந்தருளினர். அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது. சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை முடிந்து புராண கதையை கோயில் ஓதுவார் கூறினார். வழக்கமாக இந்நிகழ்ச்சியில் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை 16கால் மண்டபம் முன்பு எழுந்தருளி விழா நடக்கும். கொரோனா தொற்றால் இந்நிகழ்வு கோயிலுக்குள் நடந்தது.