உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் கட்டுமானம் அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

கோவிலில் கட்டுமானம் அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை : அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில், புராதன சின்னத்தில் இருந்து எவ்வளவு தொலைவில், புதிய கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது? என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

புராதன சின்னம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா, டி.மாங்குடியைச் சேர்ந்த, வழக்கறிஞர் பாலகுரு என்பவர் தாக்கல் செய்த மனு:அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சியில், மிகப்பெரிய கோவில் கட்டப்பட்டது. இதற்கு, ஆயிரம் ஆண்டு வரலாறு உள்ளது. உலக புராதன சின்னமாக, யுனெஸ்கோ அறிவித்து உள்ளது. தற்போது, தொல்லி யல் துறையின் கட்டுப்பாட்டில் இந்தக் கோவில் உள்ளது.கோவிலில், 3 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடக்க உள்ளதாக செய்தி வெளியானது. நேரில் சென்று பார்த்தபோது, கோவிலின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் புத்தக கடை, உணவகம், கழிப்பறை கட்டப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கான வசதியை, பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் மேற்கொள்ளலாம்.எனவே, கோவிலின் பாதுகாக்கப்பட்ட பகுதியில், மேற்கொண்டு கட்டுமானம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்.

புதிதாக மேற்கொண்ட கட்டுமானங்களை அகற்றி, பழைய நிலைக்கு வரவும்உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.தொல்லியல் துறைமனு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. புராதன சின்னத்தில் இருந்து, எவ்வளவு தொலைவில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பது குறித்து, தொல்லியல் துறை மற்றும் அறநிலையத் துறையிடம் விளக்கம் பெறும்படி, அரசு பிளீடருக்கு உத்தரவிட்டு, விசாரணையை முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !