உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படைச்சேரியில் முருகன் கோவில் கும்பாபிஷேகம்

படைச்சேரியில் முருகன் கோவில் கும்பாபிஷேகம்

பந்தலூர்: பந்தலூர் அருகே படைச்சேரியில் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

படைச் சேரி பகுதியில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் ஆலய இரண்டாம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா 9-ல் துவங்கியது. அன்று காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதுடன் யாகசாலை பிரவேசன பூஜையும் நடந்தது. நேற்று காலை கணபதி ஹோமம், விசேஷ சந்தியாஸ்தானம், அஷ்டபந்தனம் சாற்றுதல், மகா பூர்ணாஹுதி, நாடி சந்தனம் சாத்தி பூஜைகள் நடத்தப்பட்டது. 10:30 மணிக்கு தமிழ்நாடு கேரளா ஆச்சார முறைப்படி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது டன், பூஜைகளும் நடந்தது. நிகழ்ச்சிக்கு நாம் இந்து நிர்வாகத் தலைவர் பிரபுல்ஜேஜ்பால், இந்து கோவில் பூசாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் மனோஜ்குமார், மாநில பொதுச்செயலாளர் ஜலேந்திரன், மாநிலச் செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். எம். எல் .ஏ. பொன் ஜெயசீலன், தாசில்தார் சித்தராஜ், மற்றும் கவுன்சிலர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு பூஜாரிகள் பேரவை நிர்வாகி கவிந்தன் ஏற்பாடு செய்திருந்தார். பூஜைகளை மகேந்திரராஜா, சக்திவேல், முரளி, சுரேஷ்பாபு மற்றும் ஓம்காரனந்தா உள்ளிட்டோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !